Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் பாடம் கற்பிப்போம்: அதிமுகவில் இணைந்த பின் காயத்ரி ரகுராம் பதிவு..!

Mahendran
வெள்ளி, 19 ஜனவரி 2024 (14:55 IST)
நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் இன்று அதிமுகவில் இணைந்தார் என்பதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அதிமுகவில்  இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை வாங்கினார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் அதிமுகவில் இணைந்த பின்னர் சற்றுமுன் அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: 
 
மக்களின் எண்ணங்களுக்கு உயிரூட்டி, அவற்றை நிறைவேற்ற களத்தில் தொடர்ந்து போராடும் இயக்கமாக இருக்கிறது அதிமுக. இட ஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலனுக்கு முன்னுரிமை, பட்டியல் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஏற்றங்களுக்கு துணை நிற்பது போன்ற சமூக ஏற்றங்களுக்கு காரணமாக உள்ளது 
 
அதிமுக. 50 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்களின் இதயங்களில் இடம்பெற்றிருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்வதோடு, எதிரிகளுக்கும், கத்துக்குட்டிகளுக்கும் உரிய பாடத்தை புகட்டி வரும் புரட்சித் தமிழர், எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்களின் கீழ் கழகம் வெற்றிநடை போட உழைப்போம். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments