இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் முதலிடம்

Sinoj
வெள்ளி, 5 ஜனவரி 2024 (14:06 IST)
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
 
அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அந்த நிறுவனத்தின் பங்குகள் மிக மோசமாக சரிந்தது. இதனை அடுத்து ஹிண்டன்பர்க்  நிறுவனத்தின் மீது அதானி குழுமம் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. 
 
இந்த நிலையில் அதானி குழுமங்கள் மீது கூறிய குற்றச்சாட்டு சட்டவிதிமீறலாக இருந்தால் அந்நிறுவனம் எது நடவடிக்கை எடுக்கலாம் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் அந்நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து செபியே விசாரணை செய்யலாம் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.
 
இதையடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த புதன்கிழமை மட்டும் 12 % உயர்ந்தது. இந்த நிலையில், 97.6  பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அதானி உலகின் 12வது பணக்காரராக மாறியுள்ளார்.
ரிலையன்ஸ்   நிறுவன தலைவர் அம்பானி 13 வது   இடத்திலும் முன்னேறியுள்ளனர். கடந்த டிசம்பர் 2023 ஆம் ஆண்டில் அதானி 15 வது  இடத்திலும், அம்பானி 14 வது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதன் மூலம் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments