Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் நடன இயக்குநர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு - போலீஸார் விசாரணை

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2015 (16:34 IST)
சென்னை வளசரவாக்கத்தில் தமிழ் திரைப்பட பெண் நடன இயக்குநராக இருக்கும் லலிதாமணிக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் மேள் தளத்தில் கஞ்சா செடிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.


 


சென்னை வளசரவாக்கத்தில் நடன இயக்குநர் லலிதாமணிக்கு சொந்தமாக இரண்டு அடுக்குமாடி வீடுகள் இருக்கிறது. இந்த வீட்டில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த சிலரும் அந்த பகுதியில் பணிபுரியும் சில இளைஞர்களும் வாடகைக்கு வசிக்கின்றனர். 
 
இந்நிலையில், அடிக்குமாடி வீட்டின்  மேள்தளங்களில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் அங்கு நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 5 பூ தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
இதுகுறித்து, அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தியதில், நடன இயக்குநர் லலிதாமணியின் உறவினர் ஒருவர்  வீட்டின் மேள் தளத்தில் வசித்து வந்தார். அவர் தான்  அந்த கஞ்சா செடிகளை வளர்த்தார் என்று  போலீஸாரிடம் கூறினர்.
 
இவர் சினிமாவில் உதவி இசையமைப்பாளராக இருக்கிறார் என்றும் தற்போது அவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் வளசரவாக்கம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments