Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினா போராட்டம்; கலவரத்திற்கு காரணமான அமைப்புகள் : போலீசார் பகீர் தகவல்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (14:12 IST)
சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்திய போராட்டம் கலவரத்திற்கு முடிந்ததற்கு காரணமான சில அமைப்புகள் விரைவில் தடை விதிக்கப்படும் என தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர்.


 

 
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை, அங்கிருந்து வெளியேற்றும் பணியில் கடந்த 23ம் தேதி அதிகாலை தமிழக போலீசார் ஈடுபட்டனர். அப்போது, மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள திருவல்லிக்கேனி, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. மோதல் கலவரமாக மாறியது.
 
ஐஸ்ஹவுஸ் பகுதியில் இருந்த காவல் நிலையத்திற்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
 
அமைதியாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதற்கு போலீசாரே காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனால், நடந்த கலவரத்திற்கு தமிழகத்தில் செயல்படும் சில அமைப்புகளே காரணம் என தமிழக போலீசார் கூறியுள்ளனர். 
 
அந்த அமைப்புகள்தான் மாணவர்கள் போராட்டத்தை வேறு திசையில் திருப்பியதாகவும், போராட்டத்தை கைவிட மாணவர்கள் மறுப்பு தெரிவித்ததற்கு இந்த அமைப்புகளை சேர்ந்தவர்களே காரணம் எனவும் போலீசார் புகார் கூறியுள்ளனர். போராட்டக்களத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை வீடியோ கட்சிகள் மூலமாக அடையாளம் கண்டு, அவர்களை தேடிப்பிடித்து கைது செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுவரை 7 அமைப்புகளை சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலரை போலீசார் தேடி வருகிறார்கள். 
 
மேலும், அந்த 7 அமைப்புகளும் விரைவில் தடை செய்யப்படும். தற்போது அந்த அமைப்புகளின் பெயரை வெளியிட முடியாது என போலீசார் கூறியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 நாட்களில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! 6 நாட்களுக்கு மிதமான மழை! - சென்னை வானிலை ஆய்வு மையம்!

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்ய பிரியா கொலை வழக்கு: நீதிபதியின் அதிரடி தீர்ப்பு

'நான் அமைதியான பிரதமர் இல்லை, ஊடகங்களிடம் பேச பயந்தது இல்லை' - மன்மோகன் சிங் வாழ்க்கை எப்படி இருந்தது?

பீகாரில் மாறுகிறதா அரசியல் நிலவரம்? நிதிஷ்குமார் - லாலு பிரசாத் யாதவ் கூட்டணி?

கரும்பு டன்னுக்கு ரூ.950 குறைப்பு.. வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலா? - பாமக ராமதாஸ் காட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments