Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிகே வாசனின் சிம்பிள் நிபந்தனை – மயிலாடுதுறையை கொடுத்தால் கூட்டணி !

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (17:14 IST)
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சி தங்களுக்கு மயிலாடுதுறை தொகுதியைத் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைக்க ஜி கே வாசன் விரும்புவதாகத் தெரிகிறது.

தமிழகக் காங்கிரஸில் இருந்து பிரிந்த மூப்பனார் தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்றக் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த கட்சியாக மாறிக்கொண்டிருந்த த.மா.க. மூப்பனாரின் இறப்பிற்குப் பின் மெல்ல தேய ஆரம்பித்தது. அதன் பின் அவரது மகன் ஜிகே வாசன் அக்கட்சிக்குத் தலைவராகப் பொறுப்பேற்றார். இடையில் கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் காங்கிரஸிலேயே சேர்ந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸில் இருந்து பிரிந்து மீண்டும் த.மா.க-ஐ ஆரம்பித்தார்.

ஆனால் தேர்தல் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தமாக என்றொரு கட்சி இருப்பதே யாருக்கும் தெரியாமல்தான் இருக்கிறது. இந்நிலையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் வாசன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற கேள்வி சில நாட்களுக்கு முன் எழுந்தது. கூட்டணித் தொடர்பாக அதிமுக வோடு பேசி வருவதாகக் கூறப்பட்டது.

ஆனால் ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருக்கும் வாசனை ஸ்டாலினுக்கு விட மனதில்லாமல், அவரைப் பொறுமையாக இருக்க சொல்லி இருப்பதாகவும் கூறப்பட்டது. எனவே எந்தக் கட்சியோடுக் கூட்டணி என்பதில் வாசன் இன்னும் தெளிவான முடிவு எடுக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் மயிலாடுதுறை தொகுதியைக் கொடுக்கிறார்களோ அவர்களுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments