மேலும் ஒரு நகரத்திற்கு முழு ஊரடங்கு: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (16:55 IST)
மேலும் ஒரு நகரத்திற்கு முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை இந்த முழு ஊரடங்கு உத்தரவு இருக்கும் என்றும் இதில் ஜூன் 21 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் எந்தவிதத் தளர்வும் இன்றி முழுஊரடங்கு உத்தரவு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இருப்பினும் தமிழகத்திலும் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு குறையவில்லை என்பது துரதிருஷ்டமான ஒன்றே. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மதுரையிலும் நாளை நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டுள்ளது
 
மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்றும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட அதே நிபந்தனைகள் மதுரையில் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது மட்டுமின்றி மேலும் சில மாவட்டங்களுக்கும் இதே போன்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments