Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ரயில்கள் வழக்கம்போல் ஓடும்: தென்னக ரயில்வே

Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2018 (20:39 IST)
கஜா புயல் காரணமாக ஒருசில ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், ஒருசில ரயில்கள் வேறு மார்க்கத்தில் மாற்றிவிடப்பட்டும் இருந்த நிலையில் நாளை முதல் ரயில்கள் அனைத்தும் வழக்கம்போல் ஓடும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறையின் பொதுமேலாளர் குல்ஷேஸ்த்ரா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'கஜா புயலால் 9 விரைவு ரயில்கள், 14 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தன. மேலும் திருச்சி, மதுரை ரயில் கோட்டங்கள் கஜா புயலால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. பாதிப்பு அடைந்த பகுதிகள் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

இந்த மீட்புப்பணிகள் இன்று இரவுடன் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவை நாளை காலை முதல் வழக்கம்போல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வழக்கமான ரயில் பிரயாணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments