இன்று முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை.. நிபந்தனைகள் உண்டா?

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (07:17 IST)
இன்று முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும் தக்காளி வாங்குபவர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தக்காளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு தீவிர முயற்சி செய்தது. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று முதல் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் தக்காளி வாங்குவதற்கு எந்த விதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் குடும்ப அட்டையை கூட காண்பிக்க தேவையில்லை என்றும் யார் வேண்டுமானாலும் தக்காளி வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வெளியில் தக்காளி ரூபாய் 120 முதல் 160 வரை விற்கப்பட்டு வரும் நிலையில் ரேஷன் கடைகளில் வெறும் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைவார்களா?!.. என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?!...

கோவை வந்த செங்கோட்டையன் பயணம் செய்த விமானம் பெங்களுருக்கு திருப்பிவிடப்பட்டது.. என்ன காரணம்?

'டிட்வா' புயலால் பாம்பனில் சூறைக்காற்று, தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்!

பீகாரில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம் ராகுல், பிரியங்கா தான்: அகமது படேலின் மகன் பகீர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு மாணவர்களை பயன்படுத்துவதா? ஆசிரியர்கள் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments