Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம். மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்

இன்று முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தொடக்கம். மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்
, புதன், 8 மார்ச் 2017 (05:00 IST)
கடந்த வாரம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட்ட நிலையில் இன்று முதல் 10ஆம் வகுப்பு தேர்வு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கவுள்ளது. இன்று தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவிகளும் வெற்றி பெற வெப்துனியாவின் வாழ்த்துக்கள்




இன்று நடைபெறும் 10ஆம் வகுப்பு தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 12 ஆயிரத்து 187 பள்ளிகளைச் சேர்ந்த 4,98, 406 மாணவர்களூம், 4,95, 792 மாணவிகளும் தேர்வு எழுதுகின்றனர். இதுபோக தனித் 43,824 தனிதேர்வர்களும் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி, நண்பகல் 12 மணி வரை நடைபெறும் இந்த தேர்வுக்காக தமிழகம் முழுவதும்  3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தேர்வில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆகியோர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனிதா அவர்கள் கூறியபோது, 'தேர்வு நேரத்தில் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாளை பார்த்து எழுதுதல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், விடைத்தாளில் எழுதிய விடைகளை தாங்களே கோடிட்டு அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் திமுக அமைச்சரை கொலை செய்ய முயற்சி. சோடா பாட்டில் வீச்சால் பரபரப்பு