Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 20 டிசம்பர் 2020 (11:22 IST)
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடக்க இருக்கும் நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேர்தலை சந்திக்க திமுக அதிமுக உள்பட அனைத்து கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் மற்றும் தமிழக முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வரும் 23ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் தேதி அறிவிப்பு!
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் ’வரும் 23ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10ஆம் தேதி வரை மக்களை சந்தித்து தலைவர் ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் செய்வார்’ என்று கூறினார். மேலும் பல்வேறு கிராமசபை கூட்டங்களிலும் முக ஸ்டாலின் பங்கேற்று கலந்துகொள்வார் என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

’கிங்டம்’ திரையிட்ட தியேட்டர்களை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்.. என்ன காரணம்?

பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய சாப்ட்வேர் எஞ்சினியர்.. புனேவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

உக்ரைன் அதிபர் மனைவி பயணம் செய்த விமானம் திடீரென இந்தியாவில் தரையிறக்கம்.. என்ன காரணம்?

திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பு.. ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகளை காணவில்லை. 4 பேர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments