Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பழகிய மாமன் மகள் கொலை

Webdunia
திங்கள், 10 அக்டோபர் 2016 (15:00 IST)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சுலைமான என்பவர் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார். அவர் வேலைக்கு செல்லும்போது, யாஸ்மின் தனியாக தான் வீட்டில் இருப்பார். நேற்று முன்தினம் யாஸ்மின் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்


 

 





இந்நிலையில் மாலையில் பர்வீன் தனது மகளை பார்க்க வீட்டிற்கு வந்தார். அப்போது யாஸ்மின் வீட்டின் உள்ளே படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
 
இதுபற்றி  தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று உடலை கைபற்றி பிரேத பரிசொதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
 
யாஸ்மினின் மாமன் மகன் ஹனீபா(22) மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை தேடி சென்றனர். இந்நிலையில், நேற்று ஹனீபா லட்சமிநாரயாணபுரம் கிராம நிர்வாக அலுவலர் சையத்இப்ராஹீம் என்பவரிடம் சரணடைந்தார்.
 
யாஸ்மினை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட ஹனீபா காவல்துறையினர் வாகுமூலம் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:- 
 
என்னுடைய அத்தை மகள் யாஸ்மின். அவரை எனக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் முடிவில் இருந்தனர். ஆனால் திடீரென்று அவரை எனது பெரியப்பா மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். சுலைமான திருமணம் ஆன பிறகு சிறிது காலம் வெளிநாட்டில் இருந்தார்.
 
அப்போது யாஸ்மின் ஃபேஸ்புக்கில் இருப்பது எனக்கு தெரிந்தது. அதோடு அவர் ஃபேஸ்புக் கணக்கில் உள்ள நண்பர்களின் ஒருவருடன் பழகி வந்தார். இதுதொடர்பாக அவரை நான் எச்சரித்தேன். அதன் பிறகும் அவர் அந்த நபருடன் பழக்கத்தில் இருந்தார். 
 
சம்பவத்தன்று அவர் வீட்டுக்கு சென்றேன். அவரிடம் ஃபேஸ்புக்கில் நீ யாருடனும் பேசாத என்று கூறினேன். அதற்கு நீ என்னை சந்தேகப்படுகிறாயா? என்று என் கன்னத்தில் அறைந்தார். அதில் ஆத்திரம் அடைந்த நான் பக்கத்தில் இருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் வீசினேன். 
 
அதன்பின்னர் உளியை எடுத்து தாக்கியதில் அவர் உயிரிழந்தார், என்று கூறினார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைந்தனர்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments