Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் தேவையா? டிஜிபி-க்கு மனித உரிமைகள் ஆணையம் நெருக்கடி!

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (15:53 IST)
தமிழக டிஜிபி-க்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் மட்டுமின்றி பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் பல மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
 
இந்த நிலையில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்தக் கூடாது என காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸை விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கு மட்டும், அதுவும் தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இதற்கெல்லாம் மேலாக மொத்தமாக பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பையே கலைக்கவும் ஆலோசனை நடந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனோடு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
அதில்,  ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சட்டப்பூர்வமாக தான் கையாளப்படுகிறதா? காவல்துறை பணிகளுக்கு பயன்படுத்த சட்ட ரீதியாக அனுமதி உள்ளதா? தமிழக காவல்துறையில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை ஈடுபடுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா?
 
பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை முற்றிலும் களைத்துவிடுவது சரியாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நான்கு வாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும்  உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments