Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை: வாய்மொழி உத்தரவு என தகவல்

Webdunia
ஞாயிறு, 5 ஜூலை 2020 (11:41 IST)
தமிழகம் முழுவதும் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் மட்டுமின்றி பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு இருப்பதால் இன்று காலை முதல் பல மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
 
இந்த நிலையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸை காவல் நிலைய பணிக்கோ, ரோந்து பணிக்கோ பயன்படுத்தக் கூடாது என காவல்துறை தலைமையகம் வாய்மொழி உத்தரவாக அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, நெல்லை, தூத்துகுடி போன்ற மாவட்ட காவல் தலைமை பிரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்த தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸை விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளுக்கு மட்டும், அதுவும் தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் மேலாக மொத்தமாக பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பையே கலைக்கவும் ஆலோசனை நடந்து வருவதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments