சுதந்திரம் எஸ்.வி.சேகர்களுக்கு...திருமுருகன் காந்திகளுக்கில்லை : வைரல் புகைப்படம்

Webdunia
புதன், 15 ஆகஸ்ட் 2018 (17:10 IST)
மே17 இயக்கத்தின் தலைவரான திருமுருகன் காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

 
பெண் நிருபர்கள் தவறாக சித்தரித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை தேடி வருவதாக கூறிய போலீசார், அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் புகைப்படங்களும் வெளியாகின.
 
அதேநேரம், தூத்துக்குடி விவகாரம் குறித்து ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற ஈழத்தமிழலர் நலன் தொடர்பான கூட்டத்தில் பேசிவிட்டு சென்னை திரும்பிய திருமுருகன் காந்தியை போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஆனால், நீதிமன்றம் கடுமையான ஆட்சேபனையை தெரிவிக்க, வேறு ஒரு வழக்கில் அதாவது 2017ம் ஆண்டு அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பெரியார் இயக்கத்தை சேர்ந்த ஒருவர் தனது கடைக்கு வெளிப்புறம் உள்ள பலகையில் “வாங்கிய சுதந்திரம் எஸ்.வி.சேகருக்கு கிடைத்தது. ஆனால்.. திருமுருகன் காந்திக்கு ஏன் கிடைக்கவில்லை?” என எழுதி வைத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments