திருச்செந்தூரில் சிக்கியுள்ள பக்தர்களுக்கு கட்டணமின்றி பேருந்து வசதி: அமைச்சர் சிவசங்கர்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (10:30 IST)
திருச்செந்தூரில் சிக்கி உள்ள பகுதிகளுக்கு கட்டணமின்றி பேருந்து வசதி செய்து தரப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 
 
திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர். 
 
பேருந்துகள் மற்றும் ரயில்கள் நிறுத்தப்பட்டன என்பதால்  பக்தர்கள் கடும் அவதியில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 
இந்த நிலையில் திருச்செந்தூரில் சிக்கி உள்ள ஏராளமான பக்தர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அந்த பேருந்துகளில் கட்டணம் வசூலிக்க படாது என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரண பொருட்களை அரசு விரைவு பேருந்துகளில் கட்டணம் இன்றி அனுப்பலாம் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

சவுதி அரேபியா பேருந்து தீப்பிடித்து விபத்து.. 45 பேர் பலி.. ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்..!

மரண தண்டனை குற்றவாளி ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்.. இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments