ஆசைவார்த்தை கூறி பலரிடம் பண மோசடி… பிரபல யூடியூபர் 'மாடர்ன் மாமி' கைது

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (17:57 IST)
யூடியூப் சேனலில்  1200 ரூபாய் முதலீடு செய்தால் 20 நாட்களில் மூலதன தொகையும் கூடுதலாக பணம் திருப்பித்தரப்படும் என்று கூறி விளம்பரம் செய்து ஏமாற்றிய யூடியூபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்.  இவரது மனைவி ஹேமலதா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு 'மாடர்ன் மாமி' என்ற யூடியூப் சேனலை தொடங்கினார்.

இந்த யூடியூப் சேனலில் மலிவு விலையில் வீடு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை மக்களுக்குக் கூறி வந்ததாக கூறப்படுகிறது.

இதில், ஒன்றரை லட்சத்திற்கு மேல் சப்ஸ்கிரைபர்ஸ் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையில், தங்கள் யூடியூப் சேனலில் 1200  ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களில் மூதலதன தொகையுடன் 1500 ஆகத் திருப்பித் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர்.

இதை  நம்பி பலரும் தம்பதி கூறிய வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியுள்ளன்ர். ஆனால், அறிவித்தபடி தம்பதியர் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பவில்லை.

இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகாரளித்தனர். இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தம்பதியர் ,44 பேரிடம் 41 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, தம்பதியரை கைது செய்த போலீஸார்,  அவர்களிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், பைக், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இத்தம்பதியர் ஒன்றரைக் கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments