Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் பொய்யான வாக்குறுதியால் 4 மாணவர்கள் பலி: எஸ்பி வேலுமணி பேச்சு

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (09:44 IST)
திமுக கொடுத்த பொய்யான வாக்குறுதி 4 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது என்பதும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரும் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம் என கூறி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் நீட்தேர்வு நடப்பதை திமுக ஆட்சியால் தடுக்கமுடியவில்லை. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் பேசியபோது நீட் தேர்வுக்கு படித்து மாணவர்களைத் தேர்வு எழுதவிடாமல் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதியால் இந்த ஆட்சியில் 4 மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார் 
 
எஸ் பி வேலுமணி இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments