Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதி கொலையில் நான்கு பேர் குற்றவாளிகள் : போட்டுத் தாக்கும் டிராபிக் ராமசாமி

சுவாதி கொலையில் நான்கு பேர் குற்றவாளிகள் : போட்டுத் தாக்கும் டிராபிக் ராமசாமி
, வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (11:34 IST)
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியி கொலை வழக்கில் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.



சுவாதி கொலைவழக்கில், செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், ராம்குமார் நிரபாராதி என்றும், உண்மையான குற்றவாளிகளை போலீசார் மறைக்கிறார்கள் என்று பேஸ்புக்கில் தமிழச்சி என்பவர் பல அதிரும் தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

அதேபோல், ஏற்கனவே தேசியக் கொடியை எரித்து புகைப்படம் வெளியிட்டு கைதான திலீபன் மகேந்திரன், ராம்குமாரின் பேஸ்புக்கை ஆராய்ச்சி செய்து, ராம்குமாருக்கும் சுவாதிக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் ஒரு வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.அதனால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி முதல் முறையாக சுவாதி கொலைவழக்கு பற்றி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழச்சியும் விடவில்லை.. மகேந்திரனும் விடவில்லை.. நானும் விடப்போவது இல்லை.

இது அவர்களுக்கு ஆதரவாக மட்டும் இல்லை. உண்மையான நான்கு குற்றவாளிகள் போலீசாரிடம் சிக்கும்வரை நீங்கள்கூட இதனை விட்டு விடாதீர்கள்.

முன்பெல்லாம் செய்தித்தாள்களில் வரும் செய்திதான் முகநூலில் பரபரப்ப்பாக பேசப்படும். ஆனால் தற்பொழுது முகநூலில் என்ன பரபரப்பாகிறதோ அதுதான் மறுநாள் செய்தித்தாள்களில் செய்திகளாக வலம்வருகிறது. அப்பேற்பட்ட சமூக வலைதளங்களில் தங்களின் சொந்த கருத்தை பதிவிடுபவர்களை கைது செய்ய நாடினால் முகநூலில் இருக்கும் அனைத்து நபர்களையும் கைது செய்யும் சூழ்நிலை அல்லவா வரும் ?

ஏனென்றால், ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு நாளும் பல பல கருத்துக்களை பதிவு செய்துவருகிறோம். கருத்துக்களை பகிர்வதில்கூட பல கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு இதற்கு பெயர்தான் கருத்துச் சுதந்திரம் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

அப்படியான நிகழ்வுதான் சமீபத்தில் சத்தமில்லாமல் நிகழ்ந்துள்ள மகேந்திரனின் கைது. ராம்குமாரின் முகநூலை சோதனை செய்த மகேந்திரன் ஒரு அதிர்ச்சியான தகவலை ஒரு வீடியோவாக முகநூலில் வெளியிட்ட மறுநாளே மகேந்திரனின் முகநூல் பக்கத்தை முடக்கி அவரை அவசர அவசரமாக கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.

எதற்காக கைது செய்தார்கள் கருத்துசுதந்திரம் பேசியதற்காகவா?.. இல்லவே இல்லை... உண்மையான நான்கு குற்றவாளிகளை மக்களிடம் பிரபலப்படுத்த முயற்ச்சித்ததால்?.. யார் அந்த நான்கு பேர்?

எதற்காக அவர்களைக் காப்பாற்ற தமிழக காவல்துறை மும்முரமாக செயல்படவேண்டும் ?

பகிர்ந்தால் மட்டுமே இதை மீண்டும் வெடிக்கவைக்க முடியும்..

என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவாதி கொலை வழக்கில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது டிராபிக் ராமசாமியும் போலீசாருக்கு எதிராக களத்தில் குதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலை செய்துகொண்டது எப்படி: கடிதம் எழுதி வைத்த மாணவர்!