Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகார்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

kamaraj
Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (13:36 IST)
முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான 350 கோடி ரூபாய் முறைகேடு புகார் குறித்த வழக்கு விசாரணை இன்று லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் நடந்த நிலையில்  இந்த வழக்கை நவம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது  49 டெண்டர் ஆவணங்களில் உள்ள 24 ஆயிரம் பக்கங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் விசாரணைக்கு கால வரம்பு நிர்ணயிக்க முடியாது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 22ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து  அன்று இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments