Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் முன்னாள் எம்எல்ஏ பலி.! மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..!

Senthil Velan
திங்கள், 26 பிப்ரவரி 2024 (11:54 IST)
திருவள்ளூர் அருகே நடந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரவிக்குமார் பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த அவரது மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
1991 முதல் 1996 வரை பொன்னேரி முன்னாள் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் ரவிக்குமார். அவரது மனைவி நிர்மலா திண்டுக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர்.
 
இந்நிலையில் இருவரும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சீமாவரம் சுங்கச்சாவடி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில்  ரவிக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். 
 
அவரது மனைவி  நிர்மலா பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்த நிர்மலாவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரிசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான ரவிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ALSO READ: வீட்டு வசதி வாரிய முறைகேட்டில் அமைச்சர் பெரியசாமிக்கு நெருக்கடி..! வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் தீர்ப்பு..! ..!!
 
இந்த விபத்து தொடர்பாக மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments