Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதித்துறையின் நெறிமுறைகளை கடைப்பிடியுங்கள்..! மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!

Senthil Velan
சனி, 20 ஏப்ரல் 2024 (12:19 IST)
நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரியக்கூடிய நீதிபதிகள் மீது சில புகார்கள் வந்ததையடுத்து, அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். 
 
அதில், நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்களுடன் நெருக்கமாக இருப்பதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தேவையின்றி வழக்கறிஞர், சங்க நிர்வாகிகளுடன் செல்போனில், சேம்பரில் பேசுவதை நீதிபதிகள் தவிர்க்கவும், பொதுமக்களின் பார்வையில் உள்ளோம் என்று எப்போதும் விழிப்புடன் நீதிபதிகள் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற நடவடிக்கை மூலம் மக்களின் நம்பிக்கையை உறுதிபடுத்த வேண்டும் என்று தலைமை பதிவாளர் தெரிவித்துள்ளார். 

ALSO READ: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சனாதனம்.! உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!!
 
மேலும், நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவ்வாறு, நெறிமுறைகளை கடைபிடிக்காவிடில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் தலைமை பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ஆப்பு வைத்த அதிபர் ட்ரம்ப்! சூப்பர்மார்கெட்டை கபளீகரம் செய்த அமெரிக்க மக்கள்! - ஒரே வரியில் கதிகலங்கிய அமெரிக்கா!

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments