Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் மிஷினில் நிரப்ப எடுத்து செல்லப்பட்ட ரூ.74.5 லட்சம் பறிமுதல்.. பறக்கும் படை அதிரடி..!

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (14:03 IST)
தேர்தல் நேரம் என்பதால் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப கொண்டு சென்ற 74.5 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகே  தனியார் ஏடிஎம்மில் நிரப்புவதற்காக இண்டிகா காரில் ரூபாய் 74.5 ரூபாய் பணம் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

காரில் இருந்த பணத்தைவிட அதிக பணத்திற்கு ஆவணங்கள் இருந்ததால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
அதாவது காரில் எடுத்துச் சென்றது ரூபாய் 74.5 லட்சம் என்ற நிலையில் அதை எடுத்துச் சென்றவர்களிடம் ஒரு கோடிக்கான ஆவணங்கள் இருந்ததால் குழப்பம் ஏற்பட்டதாகவும் இது குறித்து விசாரணை செய்வதற்காகவே பணத்தை பறிமுதல் செய்துள்ளதாகவும் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் கூட பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது பகுதி.. அமளிக்கு தயாராகும் எதிர்கட்சிகள்..!

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழி கொள்கை இல்லை: ப சிதம்பரம்

திமுகவுடன் தொடர்பில் இருப்பதா? அதிமுக நிர்வாகிகளுக்கு ஈபிஎஸ் எச்சரிக்கை..!

ஹிந்து மதத்துக்கு மாறிய கிறிஸ்தவர்கள்.. கோயிலாக மாற்றப்பட்ட சர்ச்..!

பெண் குழந்தை பிறந்தால் ரூ.50000 பரிசு.. ஆண் குழந்தைக்கு பசுமாடு.. ஆந்திர எம்பி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments