Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிந்தாலும் பறக்கும் படை சோதனை தொடரும்! தேர்தல் ஆணைய அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

Mahendran
சனி, 20 ஏப்ரல் 2024 (08:23 IST)
கடந்த சில நாட்களாக தேர்தல் நடைபெறும் காரணத்தால் பறக்கும் படைகள் தீவிர சோதனை செய்தது என்பதும் இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் அவஸ்தையில் இருந்ததாக செய்திகள் வெளியாகின

இந்த நிலையில் ஒரு வழியாக தேர்தல் முடிவடைந்த நிலையில் இனி பறக்கும் படை பிரச்சனை இருக்காது என்று பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் தேர்தல் முடிந்தாலும் பறக்கும் படை சோதனை தொடரும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்தாலும் அண்டை மாநிலங்களில் இன்னும் தேர்தல் முடியவில்லை என்றும் அதனால் தமிழகத்தின் உள்பகுதிகளில் பறக்கும்படை சோதனை இருக்காது என்றாலும் மாநில எல்லைகளில் பறக்கும் படை சோதனை தொடரும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்

இதனால்  நேற்று தேர்தல் முடிவடைந்துவிட்டது என்பதால் பறக்கும் படை பிரச்சனை இருக்காது என்று நினைத்து அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 50 ஆயிரத்துக்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் பணம் அல்லது நகை எடுத்துச் சென்றால் சிக்கலில் மாட்டுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அண்டை மாநிலங்களை ஒட்டி இருக்கும் மாவட்டங்களான கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி உள்பட சில மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments