தமிழ் புத்தாண்டு! பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (09:01 IST)
நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து மார்க்கெட்டுகளிலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

நாளை சித்திரை மாதம் முதல் நாள் சுபகிருது தமிழ் வருடம் முடிந்து சோபகிருது தமிழ் வருடம் தொடங்குகிறது. தமிழ் புத்தாண்டில் மக்கள் வீடுகளை சுத்தம் செய்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதால் பூக்களில் விலையும் அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் நேற்று வரை கிலோ ரூ.350க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று ரூ.750 ஆக உயர்ந்துள்ளது. பிச்சிப்பூவும் ரூ.550ல் இருந்து ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. குமரி மட்டுமல்லாமல் மதுரை, திருச்சி என அனைத்து பகுதிகளிலும் மல்லிகை, அரளிப்பூ, வெள்ளை செவ்வந்தி, மரிக்கொழுந்து என பல பூக்கள் விலை உயர்ந்துள்ளன.

தமிழ் புத்தாண்டையொட்டி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதும், விலை கூடியுள்ளதும் பூ வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments