Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்கும் மனநல சிகிச்சை நிபுணரான பிளாரன்ஸ் ஹெலன் நளினி

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (14:09 IST)
மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என அனைத்து துறைகளிலும் சாதித்து வரும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இந்த வாரம் நடைபெற உள்ள திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார். 
 
சென்னையை சேர்ந்த மனநல சிகிச்சை நிபுணரான  பிளாரன்ஸ் ஹெலன் நளினி கடந்த ஆண்டு திருமதி இந்தியா பட்டம் வென்று அசத்தியவர். இந்த உயரத்தை பிளாரன்ஸ் ஹெலன் நளினி எளிதாக அடையவில்லை. அதற்காக கடினமான உழைப்பையும் விடா முயற்சியையும் செலவழித்துள்ளார். சாதித்தவர்கள் அனைவரும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்ததில்லை என்பதற்கு மற்றொரு உதாரணமாய் திகழ்பவர் தான் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. சிறுவயதில் வறுமையில் பிடியில் சிக்கியதால் குடும்ப செலவுக்காக தனதுக்கு தெரிந்த கல்வியை மாணவ, மாணவிகளுக்கு கற்பித்து அதன் மூலம் கிடைத்த  பணத்தில் மேற்படிப்பை தொடர்ந்துள்ளார். படிக்கும் வேண்டும் என்ற ஆவல் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் உள்ளத்தில் தீயாய் என்றும் எரிந்து கொண்டிருப்பதாலோ என்னமோ, இன்றும் ஒரு மாணவியாய் தொடர்ந்து படித்து வருகிறார். உளவியலில் ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்து வரும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, வெறிக்கொண்டு ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மொழிகளை பயின்று,  ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக் கொடுத்து வருகிறார். 
 
இதோடு நின்று விடாமல் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேற்றும் ஆலோசகராகவும், உடல்நலன் சார்ந்த ஆலோசனை கள் வழங்கும் சக தோழியாகவும், மொழியை பயிற்றுவிப்பதில் வல்லவராகவும், ஊக்கமளிக்கும் சமூக செயற்பாட்டாளராகவும், சுயத்தொழில் பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் பண்பாளராகவும் திகழ்ந்து வருகிறார்  பிளாரன்ஸ் ஹெலன் நளினி. இப்படி தனது வாழ்க்கை பயணத்தில் சென்று கொண்டிருந்த  பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு அவரது இளைய மகள் சரிஹா புதிய பாதையை காட்டினார் . திருமதி அழகிக்கான போட்டி குறித்து மகள்  மூலம் அறிந்த  பிளாரன்ஸ் ஹெலன் நளினி, அதில் பங்கேற்றார்
 
மாடலிங் துறையில் வல்லமை பெற்ற பலர் பங்கேற்ற போட்டியில், முயற்சியாய் கால்தடம் பதித்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி, இன்று சாதனை நாயகியாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பங்கேற்றார். மொத்தமாக 3,000 பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில்,  தமிழகத்தில் இருந்து தேர்வானது பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில்  2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்றார். அதேபோல், ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார்.  
 
கடந்த ஆண்டு கொரோனா மற்றும்  நிமோனியா காய்ச்சலாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி, மரணத்தை வாயிலை தன்நம்பிக்கையால் நோயை எதிர்த்து போரிட்டு வெற்றிப்பெற்றுள்ளார். இந்த நிலையில், அடுத்த வாரம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற உள்ள திருமதி உலக அழகி போட்டியில்  ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்-2022’ என்ற  பட்டத்துக்காக இந்தியா சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி பங்கேற்க உள்ளார்.  70க்கும் மேற்பட்ட நாட்டை சேர்ந்த பெண்கள் பங்கேற்கும் இப்போட்டியில் பிளாரன்ஸ் ஹெலன் போன்ற ஒருவர் பங்கேற்பது இந்தியாவுக்கு பெருமையே. உலகத்தின் அழகிகளை வென்று பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருமதி உலக அழகியாக மகுடம் சூடுவார் என  அனைவரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Edited by Sinoj

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

நிலம் கையகப்படுத்தும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரை ஓட ஓட விரட்டிய பொதுமக்கள்..

ஆட்சி மாறினால் கலைஞர் சிலைகள் உடைக்கப்படும்? - சீமான் பேச்சால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments