வெள்ள நிவாரண நிதி யார் யாருக்கு கிடைக்கும்? சென்னை மக்களுக்கான முக்கிய தகவல்..!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (15:26 IST)
சென்னையில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில் இந்த நிதி யார் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையில் குடியிருக்கும் ரேஷன் அட்டை வைத்திருப்போர் மற்றும் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர், ரேசன் அட்டை விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடை ஒதுக்கப்பட்ட நபர்களுக்கு  நிவாரண நிதி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையில் வாடகை வீட்டில் இருக்கும் நபர்கள் வாடகை ஒப்பந்தம் வைத்திருந்தாலோ,  கேஸ் பில் வைத்திருந்தாலோ,  ஆதார் அட்டை வைத்திருந்தாலோ,  சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வந்தாலோ நிவாரண நிதி கிடைக்கும்.

இந்த நிவாரண நிதிக்கான டோக்கன் டிசம்பர் 16ஆம் தேதி முதல் வழங்கப்பட இருப்பதாகவும், டிசம்பர் 20ஆம் தேதி முதல் நிவாரண நிதி கிடைக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Edited by Mahendran
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments