வைகை அணையிலிருந்து வெளியேறும் 6000 கன அடி வெள்ளநீர்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2023 (17:56 IST)
வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வெள்ள நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக வைகை அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தான் வெள்ள நீர் வெளியேற்றப்படுவதாகவும் எனவே மதுரை உள்பட வைகை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க கோரி மதுரை மாவட்ட பொது மக்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வைகை கரையில் உள்ள பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வைகை கரையோரம் இருக்கும் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments