Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு: அனைத்து அருவிகளில் குளிக்கத் தடை.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

Siva
திங்கள், 15 ஜூலை 2024 (11:16 IST)
குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதை அடுத்து சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதை அடுத்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நல்ல மழை பெய்ததை அடுத்து அதிக அளவு தண்ணீர் வருவதாகவும், இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அருவிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை அடுத்து பாதுகாப்பை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அருவியில் தண்ணீர் குறைந்த பிறகு மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் தண்ணீர் நன்றாக வருகிறது என்ற கேள்விப்பட்டு வந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலா பயணிகள் பாராட்டு வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கிய வேகத்தில் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை! இனி புதன்கிழமைதான்!

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் மார்ட்டின் மருமகன்.. புதுவையில் மார்ட்டின் மகன்.. பாஜகவில் இணைகிறாரா?

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments