Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு எக்ஸிட் போல் முடிவுகள்: தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார்?

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (07:33 IST)
தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதியும், அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்தடுத்த கட்டங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்றுடன் மேற்கு வங்க மாநிலத்தில் 8ஆம் கட்ட தேர்தல் முடிவடைகிறது 
 
இதனை அடுத்து இன்று இரவு 07.30  மணிக்கு எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகளில் எந்த அரசியல் கட்சிகள் ஆட்சி அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
தமிழகத்தை பொருத்தவரை ஏற்கனவே திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறி வந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு அதே போல் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேபோல் கேரளா மற்றும் புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தை பொருத்தவரை மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று உறுதியாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்ன? என்பதை இன்று இரவு 07.30 மணி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக முதல் ஆண்டுவிழா, பொதுக்கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

திருமண மண்டபத்தில் திடீரென புகுந்த சிறுத்தை.. காருக்குள் ஒளிந்து கொண்ட மணமக்கள்..!

இலங்கையில் காற்றாலை அமைக்கும் திட்டம் இல்லை: முடிவை கைவிட்ட அதானி..!

அமைச்சரவையில் திடீர் மாற்றம்: ராஜ கண்ணப்பன், பொன்முடிக்கு என்னென்ன துறைகள்?

முதல்வர் ராஜினாமா எதிரொலி: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments