மீனவர்களை பிடிக்க சென்ற அதிகாரிகள்; சுற்றி வளைத்த மீனவர்கள்! – நடுக்கடலில் பரபரப்பு!

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (11:27 IST)
சுருக்குமடி வலை வைத்து மீன்பிடிக்க முயன்ற மீனவர்களை பிடிக்க சென்ற அதிகாரிகளை மீனவர்கள் நடுக்கடலில் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க சுருக்குமடி வலைகளை பயன்படுத்த தடை உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் சிலர் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடித்த பகுதிக்கு சென்ற அதிகாரிகள் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது அதிகாரிகளை சுற்றி வளைத்த புதுச்சேரி மீனவர்கள் பலர் வலையை தர மறுத்ததோடு அதிகாரிகளின் படகை கரைக்கு இழுத்து செல்ல முயன்றுள்ளனர். பின்னர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அதிகாரிகள் திரும்ப சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments