Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா கடிதம் எழுதி நாடகமாடி வருகிறார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

ஜெயலலிதா கடிதம் எழுதி நாடகமாடி வருகிறார்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
, ஞாயிறு, 20 டிசம்பர் 2015 (14:36 IST)
தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிப்பது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி நாடகமாடி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
கடந்த சில வாரங்களாக 41 தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அவர்களது 56 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசிடம் உள்ளன.
 
இதை விடுவிக்க முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி நாடகமாடி வருகிறார். மத்திய அரசோ கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
 
பிரச்சனையை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சனை குறித்து ஜெயலலிதா தமது கடிதத்தின் மூலமாக எழுப்பி வருகிறார். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கும் கட்சத் தீவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தமிழக மீனவர்கள் நன்கறிவார்கள்.
 
தமிழகத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழைகள் காரணமாக தங்களுடைய தொழிலை நிரந்தரமாக செய்ய முடியாத நிலையில் தமிழக மீனவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள்.
 
தங்கள் தொழிலை தொடர முடியாத காலங்களில் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
 
நிவாரணம் என்பது மீனவர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டுமே தவிர அவர்களை புறக்கணித்து விட்டு நிவாரணம் வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் இளங்கோவன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil