Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை அடுத்து விழுப்புரத்திலும் தீவிபத்து: சென்னை சில்க்ஸ் கடைக்கு ஏற்பட்ட சோதனை

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (22:27 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை தி.நகரில் இருந்த சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் நகை மாளிகையின் பிரமாண்டமான கட்டிடம் தீப்பிடித்து அந்த கட்டிடம் முற்றிலும் இடிந்தது. அதில் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள், ஜவுளிகள் தீக்கிரையாகின. இந்த தீவிபத்தின் அதிர்ச்சியே இன்னும் மறைவதற்குள் தற்போது அதே நிறுவனத்தின் மற்றொரு கடை தீப்பிடித்துள்ளது.

விழுப்புரத்தில் இயங்கி கொண்டிருந்த தி சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து தகவல் தெரிய வந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க போராடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விழுப்புரம் பேருந்து நிலையம் அருகே உள்ள இந்த கட்டிடத்தின் 4 வது மாடியில் சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை இயங்கி வருகிறது இந்த தீவிபத்து மின்கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையை அடுத்து விழுப்புரத்திலும் சென்னை சில்க்ஸ் கடை தீப்பிடித்தது அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட சோதனையாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ஈபிஎஸ் கதை முடிந்துவிடும்: திருமாவளவன் எச்சரிக்கை..!

ஆபாச படமெடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்த உபி தம்பதிகள்.. அமலாக்கத்துறை விசாரணை..!

பொதுத் தோ்வு பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பாவிட்டால்? பள்ளிக்கல்வி துறை எச்சரிக்கை..!

இன்று ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் செல்கிறார் பிரதமர் மோடி.. தீவிர பாதுகாப்பு ஏற்பாடு..!

1,600-ஐ கடந்த மியான்மர் நிலநடுக்க பலி.. ‘ஆபரேஷன் பிரம்மா’ மூலம் இந்தியா உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments