Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிந்து விழும் அபாயம்? - 7 மணி நேரமாக எரியும் தீ

Webdunia
புதன், 31 மே 2017 (11:57 IST)
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இன்று அதிகாலை முதல் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.


 

 
இந்த தீ விபத்தால் இந்த கட்டிடம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. கீழ் தளத்தில் பற்றிய தீ படிப்படியாக மேல் தளங்களுக்கும் பரவியது. இதனால் 7 மணி நேரமாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர்.  
 
கட்டிடம் முழுவதும் புகையாக இருப்பதால் எங்கு தீ பற்றியுள்ளது என்பது தெரியவில்லை. எனவே, கட்டிடத்தின் வெளிப்புற கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் தற்போது தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த தீ விபத்து காரணமாக, இந்த பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகிலிருக்கும் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும், அருகிலிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கட்டிடத்தில் இருந்த சில ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
தொடர்ந்து தீ எரிவதால், அந்த கட்டிட்டத்தின் வெளிப்புற சுவரில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதன் அருகில் வசிக்கும் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
 
போலீசார் நடத்திய விசாரணையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின் கசிவால் அருகில் இருந்த டீசல் கேன் வெடித்து தீ பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments