வேட்புமனுவை வாபஸ் பெற கால அவகாசம் முடிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் வேட்பாளர் பட்டியல்..

Mahendran
சனி, 30 மார்ச் 2024 (15:25 IST)
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்ததை அடுத்து இன்னும் சிறிது நேரத்தில் இறுதிகட்ட வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும், சுயேட்சை வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட உள்ளன.

 தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது என்பதும் இன்றுடன் வேட்புமனுவை  வாபஸ் பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னம் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ போட்டியிடும் சின்னம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சின்னம் இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Blinkit 'இன்ஸ்டன்ட் மருத்துவர்' சேவை: ஆன்டிபயாடிக் விநியோகத்துக்கு டாக்டர்கள் எதிர்ப்பு

காணாமல் போன 79 வயது பாட்டி.. நெக்லஸில் உள்ள ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்த பேரன்..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: இண்டிகோவில் உரிமையாளர்கள் தாய்லாந்துக்கு தப்பி ஓட்டம்

விஜய்யை பார்க்க முண்டியடித்த தவெக தொண்டர்கள்.. காவல்துறை தடியடியால் பரபரப்பு..!

வியூகத்தை மாற்றிய தவெக.. பத்தே நிமிடத்தில் பேசி முடித்த விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments