Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்

ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்
, திங்கள், 21 மார்ச் 2016 (13:19 IST)
வயோதிகம் மற்றும் உடல்நலைக் கோளாறால் தனது 88 வது வயதில் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் மரணமடைந்தார்.


 

 
பிலிம் நியூஸ் ஆனந்தன் தமிழ் சினிமா உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்டார். அவருக்கு வயது 88. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது விட்டில் அவர் இன்று மரணமடைந்தார்.
 
1954ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமா உட்பட தென் இந்திய திரைப்படங்களின் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், இயக்குனர்கள் என அனைத்து தகவல்களையும் அவர் சேகரித்து வைத்திருந்தார்.
 
சென்னையில் பல ஆண்டுகளாக ஃபிலிம் நியூஸ் என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடம் இருந்த தமிழ் சினிமா தகவல்களை தொகுத்து நூலாக வெளியிட தமிழக அரசு நிதியுதவி அளித்தது. அதனால்  ‘சாதனை படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு’ என்ற நூலை வெளியிட்டார். இவருக்கு 1991ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்தது.
 
இவர்தான், தமிழ் திரையுலகின் முதல் மக்கள் தொடர்பாளர் (பி.ஆர்.ஓ.) தமிழ் சினிமா சரித்திரத்தை ஆவணப்படுத்தியவர்களில் இவர் முதன்மையானவரும், முக்கியமானவருமான ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் மறைவு திரைத்துறைக்கு மாபெரும் இழப்பாகும்.

Share this Story:

Follow Webdunia tamil