Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருமகனுடன் கள்ளத்தொடர்பு : மனைவியின் தலையை வெட்டி ரோட்டில் நடந்த கணவன்

மருமகனுடன் கள்ளத்தொடர்பு : மனைவியின் தலையை வெட்டி ரோட்டில் நடந்த கணவன்
, சனி, 10 அக்டோபர் 2015 (13:35 IST)
தன் மருமகனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால், தன் மனைவியின் தலையை வெட்டி ரோட்டில் நடந்த கணவரைப் பற்றி தகவல் வெளிவந்திருக்கிறது.


 


பூனேவில், முதியவர் ஒருவர் தன் மனைவியின் தலையை வெட்டி, அந்த தலையை கையில் பிடித்தவாறு ரோட்டில் நடக்கும் காட்சியை அங்குள்ள தொலைக்காட்சிகள் நேற்று  ஒளிபரப்பியது. அவர் அப்படி நடக்கும் போது, ரோட்டில் அதை பார்த்தவர்களும், அந்த வீடியோவை தொலைக்காட்சியில் பார்த்த பொதுமக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

அந்தக் கொலையின் பின்னனி இன்று வெளிவந்திருக்கிறது. அந்த முதியவரின் பெயர் ராமுசவான்(60). வீட்டின் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளியாக பணிபுரிகிறார்.

இவரின் மனைவி சோனுபாய்க்கும் அவரின் மருமகனுக்கும்(மகளின் கணவன்) கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. ராமுசவான் பலமுறை எச்சரித்தும் அவரின் மனைவி இவரின் பேச்சைக் கேட்கவில்லை.

இந்நிலையில், நேற்று(அக்.9) தன் வீட்டிற்கு திடீரென சென்றிருக்கிறார் ராமுசவான். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்தது. அவர் நெடுநேரம் கதவைத் தட்டியும் கதவு திறக்கவில்லை. பிறகு அவரின் மனைவி கதவை திறந்திருக்கிறார். வீட்டின் உள்ளே அவரது மருமகன் இருந்திருக்கிறார். இவரைக் கண்டதும், அவரது மருமகன் ஓடிவிட்டார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ராமு, மனைவிய அடித்து உதைத்திருக்கிறார். அருகிலிருந்த கோடாரியை எடுத்து கழுத்தில் வெட்டியிருக்கிறார். அதில் அவரின் தலை துண்டானது. துண்டான தலையை ஒரு கையிலும், வெட்டியை கோடாரியை இன்னொரு கையிலும் பிடித்தவாறு போலிஸ் நிலையத்திற்கு நடந்திருக்கிறார் ராமு. 

கையில் வெட்டிய தலையோடி அவர் நடந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியானார்கள். சிலர் அதை தனது மொபைலில் படம் எடுத்தார்கள். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் புனேவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil