Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் திடீர் போராட்டம்

Webdunia
சனி, 21 நவம்பர் 2015 (02:59 IST)
சென்னை  உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்களை மத்திய பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

 
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கி இந்நிலையில், நீதிமன்றத்திற்கு வருகை தந்த வழக்கறிஞர்களை மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் சோதனை செய்தனர்.
 
அப்போது, பெண் வழக்கறிஞரை சோதனை செய்தனர். மேலும், அவர்களை சோதனை செய்யும் போது, வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், வழக்கிஞர்களுக்கும், மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இதனையடுத்து, வழக்கறிஞர்கள் திடீர் போராடத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து, வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் சென்னை  உயர் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

இந்தோனேசியாவில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்கிய எலான் மஸ்க்.. இந்தியாவில் எப்போது?

Show comments