Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் புகைப்படத்தில் கோட்டை விட்ட அதிகாரிகள்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2015 (13:37 IST)
முதல்வர் ஜெயலலிதா தலமைச் செயலகம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் உள்ள குளறுபடிகள் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகியிருக்கிறது.


 
 
தமிழக சட்டப்பேரவையில் நேற்று(செப்.22) காவல்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
அதற்காக, தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை  தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குனர் அசோக் குமார், காவல் துறை ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.


 

 
இது சம்மந்தப்பட்ட புகைப்படங்களை தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தது.  அந்தப் புகைப்படங்களை பார்த்த போது, வித்தியாசமாக இருந்தது.  அதாவது, போட்டோ ஷாப் முறையில்  cut and paste  செய்தது தெளிவாக தெரிகிறது. 


 

 
புகைப்படம் எடுத்தபோது ஏதோ குளறுபடி நடந்து, அதனை சமாளிப்பதற்காக இந்த அரை குறை ஒட்டு வேலைகள் நடந்திருக்கிறது என, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள்  கிண்டலடித்தும் வருகின்றனர்.
புகைப்படங்களை உற்றுப் பார்த்தால் இது உங்களுக்கே புரியும்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

Show comments