Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்த ஃபாத்திமாவின் கடைசி இமெயில்: பாஜக பிரமுகரின் அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (16:55 IST)
சென்னை ஐஐடி மாணவி பாத்திமாலத்தீப் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது அரசியல்ரீதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த வெள்ளியன்று பாத்திமா, தனது பேராசிரியருக்கு அனுப்பிய இமெயில் குறித்த தகவலை பதிவு செய்துள்ளார். அந்த இமெயிலில் கூறப்பட்டுள்ளதும் இதுகுறித்து நாராயணன் திருப்பதியின் பதிவில் இருந்ததும் இதுதான்:
 
சென்ற வெள்ளிக்கிழமை நவம்பர் 8 அன்று மாலை 6.12 மணிக்கு ஐ ஐ டி மாணவி ஃ பாத்திமா லத்தீப் பேராசிரியர் சுதர்ஷன் அவர்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதில், "மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, என் வினாத்தாள் கடைசி பக்கத்தில் உள்ள மதிப்பெண்ணை இறுதி மதிப்பெண்களோடு சேர்க்கவில்லை. என் விடைத்தாளில் எண்ணிக்கையில் பிழை உள்ளது. தயவு செய்து இதை சரி செய்தால் சிறப்பாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
அதற்கு திரு. சுதர்ஷன் அவர்கள் அதே நாளில், 8.25 , மணிக்கு "சரி (O.K) என்று பதிலளித்துள்ளார். தெளிவான பதிலால் மாணவி ஃ பாத்திமா மகிழ்ச்சி அடைந்திருக்க வாய்ப்பு உள்ளதா தவிர மன அழுத்தத்தில் இருந்திருக்க வேண்டிய சூழ்நிலை இல்லை. ஆகவே, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணையை செய்து இந்த தற்கொலைக்கு பின்னர் இயங்கும் மத வாத, சாதிய வாத தீய சக்திகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments