Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவி இறந்த சோகம் - 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை

மனைவி இறந்த சோகம் - 2 மகன்களை கொன்று தந்தை தற்கொலை
, சனி, 20 ஆகஸ்ட் 2016 (16:59 IST)
திருக்கோவிலூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் 2 மகன்களை கொன்று தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அரும்பரம்பட்டு கிராமத்தில் வசித்தவர் செந்தில்குமார் (35). இவரது மனைவி அம்பிகா. மகன்கள் சிலம்பரசன் (15), அன்பரசன் (13). வி.புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிலம்பரசன் 10ம் வகுப்பும், அன்பரசன் 8ம் வகுப்பும் படித்து வந்தனர்.
 
கடந்த 6 மாதத்திற்கு முன்பு அம்பிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனவேதனையில் இருந்த செந்தில்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் வெள்ளிக் கிழமை அதிகாலை நீண்ட நேரமாகியும் செந்தில் குமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், செந்தில்குமாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
 
அப்போது செந்தில் குமார் சேலையில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது 2 மகன்கள் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தனர்.
 
இதுகுறித்து தகவலறிந்து வந்த அரகண்டநல்லூர் காவல் துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளிப்பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குவியும் வாழ்த்துக்கள்