Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல சினிமா 'ஸ்டண்ட் மாஸ்டர்' கனல் கண்ணன் கைது

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (19:50 IST)
தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை  நாகர்கோலியில் சைபர் கிரைம் போலீஸர் இன்று கைது செய்துள்ளனர்.

சினிமா முன்னணி  நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வந்தவர்  கனல் கண்ணன். இவர்,  சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கனல் கண்ணன் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் ’’இதுபோன்று பேச மாட்டேன்’’ என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென நிபந்தனையுடன் அவருக்கு  ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய  வீடியோவை வெளியிட்டதாக புகார் அளிப்பட்டதன் பேரில், சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை  நாகர்கோவில் சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர்.

மேலும், சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவதும், மத பிரிவினையை உண்டாக்குவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments