Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை மீரா மிதுன் மீது பொய்வழக்கு...

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (23:24 IST)
நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்த வீடியோ வைரல் ஆன நிலையில் அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவரை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது கேரளாவில் பதுங்கியிருந்த மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி மீராமிதுனை வரும் 27ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.பின்னர் மீரா மிதுன் வாய்தவறிப் பேசிவிட்டதாகக் கூறி ஜாமீன் தாக்கல் செய்தால், ஆனால அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

பின்னர் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகை மீரா மிதுன் மீது பதியப்பட்ட மேலும் 2 வழக்குகளில் ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.
மொத்தம் 4 வழக்குகளில் கைதான நிலையில் 3 வழக்குகளில் மீரா மிதுனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஓட்டல் நிர்வாகி ஊழியரை மிரட்டியதாக எழும்பூர் போலீஸ் பதிவு செய்த வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான விசாரணைக்கு வருகிற 14-ம்தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். பின்னர் போலீசார் நடிகை மீரா மிதுனை மீண்டும் சிறையில் அடைக்க அழைத்து சென்றனர்.

இந்த வழக்கில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்ரு ஆஜரானார். அப்போது, அவர் மாஜிஸ்திரெட்டிடம் , போலீஸார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்குத் தூண்டுவதாகப் புகார் தெரிவித்துக் கதரி அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும், நடிகை மீரா மிதுன் தன்னைக் கைது செய்ய முடியாது என போலீஸாரிக்கு சவால் விடுத்து வீடியோ ஒன்றைத் தனது ஆண்நண்பருடன் இணைந்து அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

அடுத்த கட்டுரையில்
Show comments