மாதவனுக்கு எந்த தொடர்பும் இல்லை - போலி வருமானவரி அதிகாரி திடீர் பல்டி

Webdunia
புதன், 14 பிப்ரவரி 2018 (10:17 IST)
ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவின் விட்டிற்கு சென்ற போலி வருமானவரி அதிகாரி, இதில் மாதவனுக்கு தொடர்பில்லை என போலீசாரிடம் பல்டி அடித்துள்ளார்.

 
கடந்த சனிக்கிழமை தீபாவின் விட்டிற்கு ஒரு வருமானவரி அதிகாரி சென்றார். ஆனால், போலீசார் மற்றும் ஊடகங்கள் அங்கு திரண்டதும் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிரபாகரன் என்ற அந்த வாலிபரை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் போலீசாரிடம் சரணடைந்தார். மேலும், தீபாவின் கணவர்தான் தன்னை அப்படி நடிக்க சொன்னார் எனவும் பிரபாகரன் வாக்குமூலம் அளித்தார். சரணடைவதற்கு முன்பே ஒரு வீடியோவில் இதை தெரிவித்து ஊடகங்களிடம் கொடுத்திருந்தார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
 
இந்நிலையில், போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், இந்த விவகாரத்தில் மாதவனுக்கு தொடர்பில்லை என அவர் பல்டி அடித்துள்ளார். பங்கு சந்தையில் ரூ.20 லட்சம் கடனை அடைக்கவே, தீபாவின் வீட்டிற்கு சென்ற பணம் பறிக்க அவர் திட்டமிட்டிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது. மேலும், ஒரு வழக்கறிஞரின் அறிவுரைப்படியே, மாதவனே காரணம் என பேசி வீடியோவை வெளியிட்டுள்ளார். அதேபோல், புதுச்சேரியை சேர்ந்த ஆனந்தவேல் என்பவர்தான் அவருக்கு போலியான அடையாள அட்டையும், வருமானவரித்துறையினரின் வாரண்டையும் தயாரித்து கொடுத்துள்ளார். 

 
தற்போது வரை மாதவன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், தவறு செய்யாத பட்சத்தில் மாதவன் ஏன் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிரபாகரன் தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு இனிமேல்தான் அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

அடுத்த கட்டுரையில்
Show comments