Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களே உஷார்: புழகத்தில் போலி 10 ரூபாய் நாணயம்!!

Webdunia
செவ்வாய், 15 நவம்பர் 2016 (10:47 IST)
பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள சில்லறை தட்டுப்பாட்டை பயன்படுத்தி, சில இடங்களில் போலி 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 
 
நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 
 
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள வங்கிகளில் கூட்டம் கூட்டமாய் அலைமோதி வருகின்றனர். அவ்வாறு பெறப்படும் நோட்டுக்களுக்கு சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் 10 ரூபாய் போலி நாணயங்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. 
 
இந்த போலி நாணயங்களில் உள்ள சிங்க முத்திரை, ஆண்டு, ரூபாய் குறியீடு உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments