Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் காதல்: எஸ்கேப் ஆன கணவனை தேடும் கர்பிணி மனைவி!

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (18:07 IST)
பேஸ்புக் காதலால் கர்ப்பமாகிய மனைவி கணவை தேடி அலையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

 
மதுரை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை என்பவர் சமையல் கலைஞராக பணிபுரிந்துவருகிறார். இவரின் மகளான சத்யா பள்ளி படிப்பை முடித்து அழகுகலை பட்டயபடிப்பு முடித்த நிலையில் விஸ்வநாதபுரம் பகுதியில் ப்யூட்டி பார்லர் வைத்து நடத்திவருகிறார்.
 
தனது பார்லரை டெவலப் பண்ணுவதற்காக பேஸ்புக் மூலமாக விளம்பரம் செய்து தனது திறமைகளை புகைப்படமாக பதிவிட்டு வந்துள்ளார். இதனால் பல்வேறு நபர்கள் நட்பு கோரிக்கை விடுத்தபோது மதுரை மேலூர் தற்காகுடியை சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞர் சகோதரன் என தொடங்கி ப்ரெண்டாகி  நாளுக்கு நாள் நட்பு அதிகரிக்க 8 மாத முடிவில் காதலாக மாறியது.   
 
இதனை தொடர்ந்து சத்யாவை உதயகுமார் பெற்றோர்களுக்கு தெரியாமலே திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் மனைவி சத்யா கர்ப்பமானார். இந்நிலையில் தனது மகன் திருமணமாகி குடும்பம் நடத்திவருவதை அறிந்த உதயகுமாரின் தந்தை பாண்டிகுமார் இருவரையும் பிரிக்க முடிவுசெய்து உதயகுமாரை மனைவிக்கு தெரியாமலயே வீட்டிற்கு அழைத்து சென்றார். 
 
இதையறிந்த கர்ப்பிணி மனைவி சத்யா தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தனது கணவருடன் தான் வாழ்வேன். அவரை மட்டும் தனியாக அழைத்து செல்ல விடமாட்டேன்   கெஞ்சி கதறி அழுதார். 
 
இதனையடுத்து உதயகுமாரை அழைத்துவந்து காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தியபோது 4 நாட்கள் மட்டும் சொந்த ஊர் சென்று அம்மாவை பார்த்து விட்டு வருகிறேன் என எழுதி கொடுத்து விட்டு சென்ற இளைஞர் திரும்பவில்லை.
 
அப்போது உதயகுமாரின் தந்தை சத்யாவிடம் பேசி விவாகரத்து பத்திரத்தோடு வீட்டிற்கு வந்தால் 2 மாதத்தில் தானே உங்களை சேர்த்துவைப்பதாக கூறி ஏமாற்றி அழைத்துள்ளார். ஆனால் சத்யா கொடுக்காமல்  இருந்த நிலையில் ஒரு வாரம் கடந்த நிலையில் கணவனை தேடி மனைவி சத்யா அவரது வீட்டிற்கு சென்றபோது உதயகுமாரின் தந்தை பாண்டிகுமார் சத்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். 
 
அதோடு தனது மகனை அஜித்குமார் போல வளர்த்துள்ளேன் எனவே 30 லட்சம் ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள், கார், பைக் போன்றவற்றை வரதட்சணையாக கொடுத்தால் மகனை அனுப்பிவைப்பதாக பேரம் பேசி மிரட்டியுள்ளார்.
 
இதனால் செய்வதறியாது திகைத்த சத்யா தான் கருவுற்றிருப்பதை கூறிய நிலையிலும் தண்ணீர் கூட தராமல் அவரை இழிவாக பேசி விரட்டியுள்ளானர். இதனால் கண்ணீருடன் காவல்நிலையத்திற்கு திரும்பிய சத்யா தனது கணவரை மீட்டு தர கூறிய நிலையில் காவல்துறையினரும் கைவிட்டனர்.
 
கட்டிய காதல் கணவரும் கைவிட்ட நிலையில், காவல்துறையும் கைவிட்டதை எண்ணி கர்ப்பிணியாக தனது கணவன் உதயகுமாரை தேடி வருகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments