Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை செய்வதவர்களுக்கு கண் பார்வை இழப்பு

மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் புரை அறுவை சிகிச்சை செய்வதவர்களுக்கு கண் பார்வை இழப்பு
, வெள்ளி, 24 ஜூன் 2016 (13:56 IST)
சேலம் மாவட்டம் மேட்டூரில் அமைந்து உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனையில், மேட்டூர், குளத்தூர், நங்கவள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். 


 

 
இந்த நிலையில் இந்த அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு அறுவை சிகிச்சை செய்த கண் பார்வை தெரியாததால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சைக்காக சென்ற போது, அவர்களது கண் பார்வை இழந்ததாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தாக கூறப்படுகிறது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரிடம் கேட்டு உள்ளனர். ஆனால் இதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்காமல், மிகவும் அலட்சியமாக பதில் அளித்து உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கபட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது.
 
இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறும் போது, கண் புரை அறுவை சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டு, அறுவை சிகிச்சை செய்த பின்னர், கண் பார்வை தெரியாமல் இருந்தாதகவும், இது தொடர்பாக தனியார் மருத்துவமனையிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது கண் புரை அறுவை சிகிச்சையின் போது, பயன்படுத்தப்பட்ட லென்சு மிகவும் தரமற்றவை என்றும், இதனாலே கண் பார்வை இழந்து உள்ளதாக தெரிவித்ததாகவும் கூறுகின்றனர்.  இதற்கு அரசு மருத்துவர்கள் முறையான பதில் அளிக்காமல் அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
 
மேலும் அவர்கள் கூறும் போது, இது போன்று பார்வை இழந்தவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று, அலட்சியமான முறையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மற்றும், தரமற்ற லென்சு வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

Mohammed Thajudheen



 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுவதாக அறிவிப்பு!