Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையிலிருந்து கிறிஸ்துமஸ் சிறப்பு பேருந்துகள்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (11:30 IST)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக மக்கள் சென்று வர கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஞாயிற்றுக்கிழமையில் வருவதாலும், தொடர் விடுமுறைகள் இருப்பதாலும் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

இதனால் பெரும்பாலான அரசு, தனியார் பேருந்துகளில் முன்பதிவுகள் நிரம்பியுள்ளன. 450 அரசு பேருந்துகளில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் பலர் ஊர்களுக்கு கிளம்பி செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் தேவையை பொறுத்து கூடுதல் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments