Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூரில் மேலும் ஒரு மாதம் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு!

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (19:43 IST)
வேலூர் மாவட்டத்தில்  நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் நாள்தோறும் கொரொனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஏற்கனவே சென்னை, காஞ்சுபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வரும் ஜூலை 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி,  ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறப்படுள்ளதாவது:

இறைச்சிக் கடைகள் திங்ட்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டுமே செயல்பட வேண்டும், துணிக்கடைகள், நகைக்கடைகள் ஆகியவை ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனிக் கிழமை ஆகிய 4 நாட்கள் தான் செயல்படும் , மருந்துகடைகள், பெட்ரோல் பங்குகள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் எல்லாநாட்களிலும்  இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments