Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2015 (21:24 IST)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் கட்டணத்தை ஜனவரி 31 ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


 


மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் மின் கட்டணத்தை உடனே செலுத்த தேவையில்லை. தற்போது, செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை ஜனவரி 31ஆம் தேதி வரை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம்.

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் வீடுகளுக்கு தலா அரைகிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்வதற்காக 20 குளோரின் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். 

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பண்ணை பசுமை கடைகள் மற்றும் நடமாடும் அங்காடிகள் மூலம் குறைந்த விலையில் காய்கறி விற்பனை தொடரும் என்றும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் 1,105 மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments