Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தவர் வீட்டுவாசலில் சிறுநீர் கழித்த சண்முகம் சுப்பையாவுக்கு பதவி?…உதயநிதி ஸ்டாலின் கேள்வி !

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (23:45 IST)
சில மாதங்களுக்கு முன் ஒரு முதியவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக போலீஸாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டவர் பாஜக நிர்வாகி சண்முகம் சுப்பையா.

இந்நிலையில் பாஜகவின் ABVP சண்முகம் சுப்பையாவை மதுரை AIIMS-ன் வழிகாட்டுகுழு உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,’’ தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி-மரியாதைக்குரிய கல்வியாளர்கள் உள்ளனர். எனினும், பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேண்டும் என பெண் ஒருவர் வீட்டின் முன் சீறுநீர் கழித்த தகுதியைக்கொண்டு பாஜகவின் ABVP சண்முகம் சுப்பையாவை மதுரை AIIMS-ன் வழிகாட்டுகுழு உறுப்பினராக மத்திய அரசு நியமித்துள்ளது கேவலம் பொய் சொல்லி-கலவரம் செய்தால் அமைச்சர்-சிறுபான்மையினரை மிரட்டினால் எம்.பி-கோமியம் குடித்தால் எம்.எல்.ஏ என உயர் பொறுப்புகளுக்கு காவிகள் வைத்திருக்கும் தகுதிகள் இவை. இதில் புதிய இணைப்பு அடுத்தவர் வீட்டுவாசலில் சிறுநீர் கழித்தால் AIIMS-ன் வழிகாட்டுக்குழு உறுப்பினர் ஆகலாம் என்பது’’ என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments